போர்க் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை – ஜகத் ஜயசூரிய

தாம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.Jagath Jayasuriya

இறுதிக் கட்ட போரின் போது தாம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபடுமாறு உத்தரவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஜகத் ஜயசூரிய தெரிவிப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரேஸிலுக்கான தூதுவராக கடமையாற்றிய ஜகத் ஜயசூரிய போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து, மனித உரிமை அமைப்புக்கள் தென் அமெரிக்க நாடுகளில் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.

வைத்தியசாலைகளில் மீது தாக்குதல் நடத்தியமை, சித்திரவதை கூடங்களை நடத்தியமை, கடத்தல்கள் காணாமல் போதல்கள் போன்றவற்றுக்கு ஜகத் ஜயசூரிய உத்தரவிட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், தாம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]