போர்க்கப்பல் கொள்வனவு தொடர்பாகப் பேச்சு: பாதுகாப்புச் செயலாளர் ரஷ்யாவுக்குப் பயணம்

போர்க்கப்பல் கொள்வனவு தொடர்பாகப் பேச்சு நடத்துதற்காக, பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவொன்றுடன் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தக் குழுவில், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சரத் குமார, கடற்படைத் தளபதி அட்மிரல் ரணசிங்க ஆகியோரும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தில் எஞ்சியுள்ள- தொகையைக் கொண்டு, 158 மில்லியன் டொலர் பெறுமதியான போர்க்கப்பலை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான, Rostec மூலம் இந்த கொள்வனவு மேற்கொள்ளப்படவுள்ளது. அதேவேளை, ரஷ்யாவிடம் இருந்து, MI 171 HS ரகத்தைச் சேர்ந்த பாவிக்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்ட 10 உலங்கு வானூர்திகளையும், இரண்டு IC 76 MD சரக்கு விமானங்களையும், ஆறு, SU 30 போர் விமானங்களையும் கொள்வனவு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.