போராட்டத்தை கைவிட்ட தபால் ஊழியர்கள்

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 26ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துவந்த தபால் ஊழியர்களின் கோரிக்கைக்கு அரசு நியாயமான தீர்வை பெற்றுத்தரும் எனக் கூறியுள்ளதால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட உபகுழுவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தமக்கு நியாயமான பதில் கிட்டியதை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தபால் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் இணைப்பாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார்.

தபால் சேவை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 10 இலட்சம் அஞ்சல்கள் விநியோகிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா, காலி, கண்டி உள்ளிட்ட இடங்களில் புராதன தபால் நிலையங்கள் அகற்றப்பட்டு ஹோட்டல்கள் அமைப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கையை கைவிட வேண்டும்.
தற்போது தனியார் கட்டமொன்றில் கூலிக்கு நடத்திச் செல்லப்படும் பிரதான தபால் நிலையம் அதில் இருந்து அகற்றப்பட்டு கொழும்பு ஜனாதிபதி மாவத்தை அமைந்து பிரதான தபால் காரியாலய கட்டத்தில் அமைத்தல்.

2006 ஆம் ஆண்டு 6.6 இலக்க சுற்று நிருபத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக தபால் சேவைக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதில் திருத்தம் மேற்கொள்ளல்.

உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்நிறுத்தி கடந்த 26ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

பல்கலைகழகத்திற்கு முதலாம் ஆண்டுக்காக இணைத்துக்கொள்ளும் திகதியும் இந்தப் போராட்டத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அடுத்த மாதம் 7ஆம் திகதிவரை மேற்படி கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]