போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கும் தமிழ்க் கைதி­கள் மூவ­ரி­ன­தும் வழக்கு விசா­ர­ணையை வவு­னி­யா­வுக்கு மாற்­றம்

போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கும் தமிழ்க் கைதி­கள்அநு­ரா­த­பு­ரத்­தில் உண்ணாவிரதப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கும் தமிழ்க் கைதி­கள் மூவ­ரி­ன­தும் வழக்கு விசா­ர­ணையை வவு­னி­யா­வுக்கு
இடம்­மாற்­றம் செய்­வது தொடர்­பில் நாளை இறு­தி­யான முடிவு தெரி­ய­வ­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இது குறித்து உரிய தரப்­பி­ன­ரு­டன் நாளை பேச்சு நடத்தி உரிய தீர்­மா­னம் எடுக்­கப்­ப­டும் என்று அரசு நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் அறி­வித்­தது.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுச் செவ்­வாய்­கி­ழமை அர­சி­யல் கைதி­கள் தொடர்­பான சபை ஒத்­தி­வைப்­பு­வேளை விவா­தத்தை எதிர்க் கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் கோரி­யி­ருந்­தார்.

விவா­தத்­தில் பேசிய அமைச்­சர்­க­ளான சாகல ரத்­நா­யக்க, டி.எம்.சுவா­மி­நா­தன் மற்­றும் நீதித் துறைப் பிரதி அமைச்­சர் சமிந்த துமந்த ஆகி­யோரே நாளைய கூட்­டத்­தில் இது குறித்து ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­த­னர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]