போன் செய்து Sorry கேட்ட விஜய்- யாரிடம் தெரியுமா?? இதுவரை வெளிவராத உண்மை

விஜய் என்றாலே இப்போது பெரும் மாஸ் இருக்கிறது. அவர் சினிமா நிகழ்ச்சிகளுக்கு வந்தால் ஒரு பரபரப்பு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் அவர் மேடையில் பேசினால் அந்த விசயம் வைரலாகும்.

சர்க்கார் இசை வெளியீட்டு விழாவின் போது அவர் நான் தமிழக முதலமைச்சரானால் என பேசியது சர்ச்சையானது. அதே வேளையில் அவரும் பல விசயங்களை மனதில் கொண்டு பேசுவார். ஆனால் அவரிடம் விஷயத்தை வாங்காமல் நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் விடுவதில்லை. புலி பட நிகழ்ச்சியின் போது விஜய் மேடையில் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

இடையில் அவரிடம் சென்று ஒருவருக்கு மொமண்டோ கொடுக்க வேண்டும் என நிகழ்ச்சி தொகுப்பாளின் அஞ்சனா கூற அவர் அப்போது அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறிவிட்டாராம். பின்னர் விஜய் போய்விட்டார்.

ஆனால் அஞ்சனா விஜய்யை பாடி சொன்னதால் தான் அவர் கோபித்துக்கொண்டு போய்விட்டார் என அங்கிருந்தவர்கள் திட்டினார்களாம். பின் அடுத்த நாள் விஜய் தன் மேனேஜர் மூலம் போனில் லைனில் வந்திருக்கிறார். அப்போது சாரி, நீங்கள் நேற்று மேடையில் ஏதோ சொன்னீர்கள். நான் கேட்காமல் போய்விட்டேன். வேறோரு சிந்தனையில் இருந்தேன். சரியாக கவனிக்கவில்லை என கூறினாராம்.

ஒரு பெரிய ஸ்டார் நடிகர் இப்படி மிகவும் சிம்பிளாக நடந்துகொண்டதை நினைத்து அஞ்சனா பெருமையுடன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அஞ்சனாவுடன் நடிகர் கயல் சந்திரன் திருமணத்திற்கு விஜய் வந்திருந்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]