பிரசார கூட்டத்தின்மீது போத்தல் வீச்சு

போத்தல் வீச்சு

வெலிமடை டயரபா சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியுடன் கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சார கூட்டத்தின்மீது, கண்ணாடி போத்தல் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட அறுவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் கைது செய்யப்பட்டவர்களை வெலிமடை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]