போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலைக்கு அனுமதிப்பதில்லை

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலைக்கு அனுமதிப்பதில்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை(11) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், பிரதேச செயலாளர் ந.வில்வரெட்னம், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கருணாகரன், அரச திணைக்களப் பிரதிநிதிகள், அரசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள பங்ககேற்றனர்.

பெரிய புல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலை அமைக்கப்படுவதனை பிரதேச மக்கள் எதிர்கிறார்கள் என இதுஅதனைத் தடைசெய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார் அதையடுத்து விசேட கலந்துரையாடல்களின் ஊடாக அனுமதிப்பதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு புவிச்சரிதவியல் திணைக்களமும் வனபரிபாலன சபை திணைக்களமும் இணைந்து பிரதேச செயலாளருக்கு தெரியாமல் அனுமதி வழங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 35 பேருக்கு மூன்று மாத காலத்திற்குள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியபடுத்தி உள்ளனர்.

இனிமேல் பிரதேச செயலாளரின் அனுமதி இன்றி எந்த அனுமதியும் வழங்க கூடாது என ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

புவிச்சரிதவியல் திணைக்களத்தின் பொறியியலாளர் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருவதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]