போத்தலில் அடைக்கப்படும் குடிநீர் தொழிற்சாலை அமைக்கும் பணியினை நிறுத்துமாறு கோரிக்கை

போத்தலில் அடைக்கப்படும் குடிநீர் தொழிற்சாலை அமைக்கும் பணியினை நிறுத்துமாறு கோரிக்கை

மட்டக்களப்பு பெரிய புல்லுமலைப் பகுதியில் போத்தலில் அடைக்கப்படும் குடிநீர் தொழிற்சாலை அமைக்கும் பணியினை உடனடியாக நிறுத்துமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று (05) அப்பிரதேச மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியபுல்லுமலை கிராம சேவகர் பிரிவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் பாரியளவிலான தொழிற்சாலையொன்றினை அமைப்பதற்காக முயற்சிகள் இடம்பெறுவதாக அறியக்கூடியதாகவுள்ளது.

மேற்படி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியிலுள்ள அதிகமாக பகுதிகளில் முழுமையான நீர்ப்பற்றாக்குறை காணப்படுகிறது. இவ்வாறு நீர்ப்பற்றாக்குறை காணப்படும் பகுதிகளில் நிலக்கீழ் தண்ணீர், குளங்கள், உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டம் போன்றவற்றின் மூலம் நீரைப் பெற்று அத்தண்ணீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலையாக இத் திட்டம் அமையவுள்ளதாக எம்மால் அறியக்கூடியதாகவுள்ளது.

ஏற்கனவே குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு நீர் பற்றாக்குறையாகக் காணப்படும் இப்பகுதிகளில் வாழும் கிராம மக்கள் என்ற ரீதியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எங்களது எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது பகுதி மக்கள் குடிப்பதற்கே நீர் இல்லாமல் அல்லோப்படும் இவ்வேளையில் மழை நீர் மூலம் குளங்களில் சேமிக்கப்பட்டுள்ள நீரையோ அல்லது நிலக்கீழ் நீர் மூலமோ அல்லது நீர்ப்பாசனத் திட்டம் மூலம் வழங்கப்படும் நீரைப் பயன்படுத்தி இதுபோன்ற தொழிற்சாலை செயற்படுமாயின் எமது பகுதி மக்கள் குடிப்பதற்கு நீர் இன்றி பலதரப்பட்ட நோய்களுக்கும் இன்னல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்

அது மாத்திரமல்லாமல் இப்பகுதி மக்கள் விவசாயத்தினை ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வருபவர்கள். குளத்தில் தேங்கியுள்ள உள்ள நீரையோ அல்லது நிலக்கீழ் தண்ணீரையோ இத்தொழிற்சாலை பயன்படுத்துமாயின் எமது விவசாயிகள் பாதிப்படைவார்கள் அத்துடன் இத்தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் இரசாயணக் கழிவுகள் மூலம் எமது விவசாய நிலங்கள் பாதிப்படைவதோடு சுற்றாடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு பலவகையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இத்தொழிற்சாலை பற்றிய எந்தவொரு திட்டமும் மக்களுக்குத் தொழிவுபடுத்தப்படவில்லை. அத்துடன் இத்தொழிற்சாலைக்கான காணி எவ்வாறு வழங்கப்பட்டது என்பதோ சூழல் அதிகாரசபையினால் வழங்கப்பட்ட அறிக்கை எவ்வாறு வழங்கப்பட்டது எவ்வாறு மக்களுக்கு தெழிவூட்டப்படவில்லை ஆகவே இவ்வாறானதொரு தொழிற்சாலை எமது பகுதியில் அமைப்பதற்கு எமது எதிர்ப்பினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்தொழிற்சாலை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து நடவடிக்கைகளும் உடன் நிறுத்தப்பட உரிய அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் துரித நடவடிக்கையெடுக்க வேண்டும் என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் தொழிற்சாலை குடிநீர் தொழிற்சாலை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]