போதை மாத்திரைகளை விற்ற இருவர் சிக்கினர்

ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 600 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ மற்றும் பதுளை பகுதிகளை சேர்ந்த 27 மற்றும் 33 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]