போதை மாத்திரைகளை ஊருக்கு அறிமுகப்படுத்திய இளைஞன் கைது

பொலன்னறுவை திம்புலாகல மகுலதமன பிரதேசத்தில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, முச்சக்கரவண்டியில் காணப்பட்ட போதைமாத்திரைகளுடன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக அரலகங்வில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கொழும்பில் முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த நபர், புதுவருடபிறப்பை முன்னிட்டு தனது ஊருக்கு சென்றுள்ளதுடன், அங்குள்ள இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக இந்த போதை மாத்திரைகளை கொண்டுச்சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஒரு தொகை வில்லைகளை 450 ரூபாய் வீதம் 9 இளைஞர்களுக்கு இந்த நபர் விநியோகித்துள்ளார். முதலில் இலவசமாக இவற்றை வழங்கியதுடன், பின்னர் பணம் பெற்றுக்கொண்டு அதனை வழங்கியுள்ளார்.

சந்தேக நபரை கைசெய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்காக முச்சக்கரவண்டியை கைப்பற்றியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]