தெலுங்கு பட உலகில் போதை பொருள் வழக்கு விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் கைது செய்யப்பட்ட சிலரில் காஜல் அகர்வால் மானேஜர் ரோனி என்பவரும் ஒருவர்.

இவருடைய வீட்டில் இருந்து போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இதனால் காஜல் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கூறிய அவர், “ஒருவருடைய தனிப்பட்ட வி‌ஷயத்தை நான் கவனிக்க முடியாது. ஒரு போதும் நான் சமூகத்துக்கு எதிராக இருக்க மாட்டேன்” என்று தெரிவித்து இருந்தார்.

தனது மானேஜர் போதை பொருள் விவகாரத்தில் கைதானத்தால் தனக்கு கெட்டபெயர் வரும் என்று கருதினார். எனவே இனி தனக்கு மானேஜர் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார். தற்போது ஒரு உதவியாளர் மட்டுமே இருக்கிறார்.

புதிய படங்களுக்கு கதை கேட்பது, சம்பளம் பேசுவது போன்ற முக்கிய வி‌ஷயங்களை தனது பெற்றோர் உதவியுடன் தானே செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார். மானேஜரின் நடவடிக்கையால் தனது பெயர் இனியும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த புதிய முடிவு என்று கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]