முகப்பு Superfeatured 125 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கைப்பற்றல்

125 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கைப்பற்றல்

களுபோவில மற்றும் பத்தரமுல்ல பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து ஆயிரத்து 248 மில்லியன் ரூபா பெறுமதியான 103 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


இவர்களிடம் இருந்து 1,248 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று இரவு களுபோவில, பிரதிபிம்பாராம் வீதியில் “பிராடோ” ரக வண்டி ஒன்றை சோதனையிட்ட போது அதிலிருந்து 30 ஹெரோயின் பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

சந்தேகநபர்களை விசாரணை செய்த போது பத்தரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேலும் 66 ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த பொதிகளில் இருந்து 103 கிலோ 950 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com