முகப்பு News Local News போதை பொருளை கட்டுப்படுத்த முப்படையினரை களமிறக்க தீர்மானம்

போதை பொருளை கட்டுப்படுத்த முப்படையினரை களமிறக்க தீர்மானம்

போதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக முப்படைகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மை காலமாக, நாட்டின் அதிகரித்துவரும் போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் உள்ளிட்ட இலங்கை பொலிஸார் மூலம் பாரிய பணி முன்னெடுக்கபடுகின்றது.

அத்துடன், தேவையான சந்தர்ப்பங்களில் பொலிஸ் விசேட அதிரடி படை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்பும் பெறப்படுகின்றது.

இந்த நிலையில், போதை பொருள் கடத்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு முப்படையின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது அவசியம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக குறிப்பிட்ட காலப்பகுதிக்கு செல்லுபடியாகும் வகையில், சட்டமா அதிபரினால் சிபாரிசு செய்யப்பட்ட சில அதிகாரங்களை முப்படையினருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்காக, போதை பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக விசேட ஒழுங்குவிதிகள் தொடர்பான திருத்த சட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் இணைந்து இது குறித்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com