போதையில் வழக்கறிஞர் ஒருவர் பொலிசாரின் மண்டையை உடைத்த வீடியோ இணையத்தில் வைரல்

போதையில் வழக்கறிஞர் ஒருவர் பொலிசார் ஒருவரிடம் குத்துச்சண்டை வீரர் போல் சண்டையிட்ட சம்பவம் கர்நாடகாவில் இடம்பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் தவாங்கர் பகுதியில் போக்குவரத்து பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ருத்ரப்பா என்பவரது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது அவர் குடித்துள்ளாரா என்பதை சோதனை செய்ய அவரின் வாயை ஊதுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த குறித்த வழக்கறிஞர் என்னையே இப்படி செய்ய சொல்றியா என கூறியவாறே பொலிசாரை குத்துச் சண்டை வீரர் போல் தாக்கியதில் பணியில் இருந்த காவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

இதனை அருகிலிருந்தவர்கள் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுவிட்டனர்.

இதையடுத்து பொலிசார் ருத்ரப்பாவை கைது செய்து, அவர் குடிபோதையில் இருந்தாரா என பரிதோதனை செய்துள்ளனர்.

மேலும் பொலிசாரின் பணிக்கு இடையூறாக இருந்தமைக்காக அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]