போதைப் பொருள் வியாபாரியின் சகாக்கள் இன்று அதிரடி கைது

வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் பிரபல போதைப் பொருள் வியாபாரியான ‘டீ மஞ்சு’ என்பவரது உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட மூவர் ஹெரோயின் மற்றும் ஹசீஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (06) பிற்பகல், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே ஹேகித்த பிரதேசத்தில் போதைப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த நபர்களிடம் 300 மில்லி கிராம் ஹெரோயின், ஹசீஸ் 460 மில்லி கிராம், 520 மில்லி கிராம் ஆகிய பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

பிரபல போதைப் பொருள் வியாபாரியான ‘டீ மஞ்சு’ என்பவரது உதவியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள, வத்தளையைச் சேர்ந்த சுரேஷ் லக்ஷித பெனாண்டோ (31) என்பவரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்

சந்தேக நபர்கள் இன்றைய தினம் (07) வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். வத்தளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]