போதைப் பொருளுடன் பெண் கைது

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பொரளை, பேஸ்லைன் மாவத்தை பிரதேசத்தில் வைத்து இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான பெண்ணிடம் இருந்து 13 கிராம் 100 மில்லிகிராம் நிறையுடைய போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதே பிரதேசத்தில் வசிக்கும்51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண்ணை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]