போதைப் பொருட்களை வைத்திருந்த யாழ் இளைஞர் விளக்கமறியலில்…

போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் 14 நாட்கள் யாழ்.நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

6 கிராமும் 106 மில்லி கிராம் போதைப் பொருளைளை தன்வசம்
வைத்திருந்த போதே  விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் வைத்து நேற்று முன்தினம் (24) மாலை கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரை விசேட அதிரடிப் படையினர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நேற்று (25) முற்படுத்திய வேளை நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]