போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு கடுமையான தண்டனை

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிர்காலத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சர் நளின் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடும்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய உருவாக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]