போதைப்பொருள் பாவனைக்கெதிராக ஏற்பாடுசெய்யப்பட்ட மாணவர் பேரணி

போதைப்பொருள் பாவனைக்கெதிராக ஏற்பாடுசெய்யப்பட்ட மாணவர் பேரணியொன்று ஏறாவூர் – தாமரைக்கேணி பிரதேசத்தில் 21.09.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக, பேண்தகு பாடசாலையான ஏறாவூர்- தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலயம் மற்றும் ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் ஆகிய நிறுவனங்களின் ஒழுங்கிணைப்பில் நடைபெற்ற இப்பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கெதிரான வாசகங்களைக்கொண்ட பதாதைகளை ஏந்திச்சென்றனர்.

‘போதைகளை அகற்றி மேதைகளாக்குவோம்” ‘போதை- பாவத்தின் ஆணிவேர்” ‘குடி- குடியை அழிக்கும்” என்பன போன்ற வாசகங்கள் பதாதைகளில் எழுதப்பட்டிருந்தன.

பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமான இப்பேரணி தாமரைக்கேணி பிரதேசத்திலுள்ள உள்ளக வீதிகளில் வலம் வந்து பாடசாலை முன்றலில் நிறைவடைந்தது.

இங்கு மாணவர்களுக்கான விளக்கவுரையினை கலாசார உத்தியோகத்தர் இஸட்ஏ. நழீம் நழீமி நிகழ்த்தினார்.

போதைப்பொருள்

பாடசாலை அதிபர் ரீஎம். மஹ்தூம் மரைக்கார் மற்றும் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் எம்ஏசி. றமீஸா ஆகியோரின் கூட்டுத்தலைமையில் இங்கு நிகழ்வுகள் நடைபெற்றன.

விஞ்ஞான தொழில் நுட்ப உத்தியோகத்தர் எஸ். விக்னேஸ்வரன் தொழில் நுட்ப மனிதவள உத்தியோகத்தர் எஸ்எம். சுலைஹா, மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி முறைசாராக்கல்விக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்எல். சபூர் மற்றும் சமாதானக்கல்வி, சமூக நல்லிணக்க இணைப்பாளர் எம்ஜிஏ. நாஸர் உள்ளிட்ட பலர் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]