போதைப்பொருள் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் யார்? ரஞ்சன் ராமநாயக்கவிடம் விசாரணை

இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் கொக்கைன் போதைப்பொருள் பாவிப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் சாரணைகள் மேற்கொள்ளப்ட்டது.

குறித்த கருத்து தொடர்பில் ஆராய ஐக்கிய தேசிய கட்சியினால் நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான குழுவினர் இந்த விசாரணையை மேற்கொண்டனர்.

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயகவிடம் பெற்ற வாக்குமூல அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இந்த விசாரணை தொடர்பான மேலதிக காரணிகளை ஊடகங்களுக்கு கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]