போதைப்பொருள் கடத்தல் மையமாக இலங்கை

போதைப்பொருள் கடத்தல் மையமாக இலங்கை மாறியுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், சில வகையான போதைப்பொருட்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதற்காக கடத்தி வரப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வருடம் ஆயிரத்து 500 கிலோகிராம் கொக்கேய்ன் போதைபொருள் கைப்பற்ற்றப்பட்டுள்ளன.

எனினும், இந்தவகை போதைபொருள் இலங்கையில் பயன்படுத்தப்படுவதில்லை இதன்ஊடாக போதைப்பொருள் கடத்தல் மையமான இலங்கை மாறியுள்ளதை அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், போதைபொருள் கடத்தலை முறியடிப்பதற்கு சர்வதேச நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த விடயத்தில் தாம் எந்தவித அரசியல் தலையீட்டையும் எதிர்கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் வசிப்பவர்களே இங்குள்ளவர்களை போதைபொருள் கடத்தலுக்கு ஊக்குவிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]