போதைப்பொருள் கடத்தலுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க இராணுவம் தயார்: ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க

போதைப்பொருள் கடத்தலுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க இராணுவம் தயார்: ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க

நாட்டில் தற்போது பாரிய பிரச்சினையாக எழுந்துள்ள போதைப்பொருள் கடத்தலுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க இலங்கை இராணுவம் தயாராகவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் 69ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு படைகளின் கொடி ஆசீர்வாத நிகழ்வு அநுராதப்புரத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளர்களை சந்தித்த இராணுவத் தளபதி போதைப்பொருள் பிரச்சினை தொடர்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து அவர் கூறுகையில், ‘நாட்டில் போதைப்பொருள் கடத்தல் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், அரசாங்கமானது இராணுவத்தினரது உதவியை எதிர்பார்க்கும் பட்சத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட இராணுவம் தயாராக உள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]