போதைப்பொருளை உறிஞ்சுவதற்கு

புதுவகையான போதைப்பொருளும் அவற்றை உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்படும் நவீனரக கருவியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம், நிக்கவரெட்டிய பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், நிக்கவரெட்டிய பதில் நீதவான் ஜே.எம். விமலசேனவின் கட்டளையின் பிரகாரம், ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான எம்.என்.எம்.சஜான் (வயது 25) என்பவரே, இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை, எதிர்வரும் 22ஆம் திகதியன்று நீதிமன்றத்தின் ஆஜராகுமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]