போதைப்பொருளுடன் தப்பிச் செல்ல முற்பட்டோர் மீது துப்பாக்கி பிரயோகம்- குளியாபிட்டியில் சம்பவம்

குளியாபிட்டி – மீகாஹகொட்டுவ பிரதேசத்தில் சிற்றூர்தியில் போதைப்பொருளை கொண்டு சென்ற மூன்று பேரை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த 101 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில்,அதன் பெறுமதி சுமார் 12 லட்சம் ரூபாய் என காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட போது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் காவல்துறை அலுவலகர் ஒருவரின் காலில் சிறு காயம் ஏற்பட்டு குளியாபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் நீண்டகாலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]