முகப்பு News Local News போதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் மவுன்ட்லாவேனியாவில் கைது

போதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் மவுன்ட்லாவேனியாவில் கைது

போதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் கொழும்பு – மவுன்ட்லாவேனியாவில் பொலிஸாரின் கைது செய்யப்பட்டுள்ளார்.

களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேர் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விதமான போதைப்பொருட்கள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பகுதியில் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த 28 பேரிடம் போதைப்பொருட்கள் காணப்பட்டதை தொடர்ந்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர்கள் தெமட்டகொட, நுகேகொட, ராகம, புத்தளம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதோடு, இவர்கள் 28 பேரும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com