போதைபொருள் குற்றத்தில் 79,378 பேர் கைது

போதைபொருள் குற்றத்தில் 79,378 பேர் கைது

போதைப்பொருட்கள் தொடர்பான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 79 ஆயிரத்து 378 பேர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இதனை தெரிவித்துள்ளது.

இந்த சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு போதைப்பொருட்கள் தொடர்பான குற்றச் செயல்கள் தொடர்பில் 82 ஆயிரத்து 482 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2016 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 சத வீத வீழ்ச்சியை காட்டியுள்ளது.

35 வீதமானோர் ஹெரோய்ன் தொடர்பான குற்றங்களுக்காகவும், 60 வீதமானோர் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் போதைப்பொருட்கள் தொடர்பான குற்றச் செயல்கள் தொடர்பில் கைதானவர்களின் வீதம் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடுகையில், ஒரு இலட்சம் பேருக்கு 350 என்ற அளவில் காணப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]