போதைபொருளுடன் இருவர் கைது

ஹெரோய்ன் போதைபொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் – கெட்டுவான பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 20 ஹெரோய்ன் போதைபொருள் பக்கெற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுவரி திணைக்கள அதிகாரிகள் இன்று முற்பகல் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த இந்த சந்தேக நபர்கள் இருவரும் நீண்ட காலமாக ஹெரோய்ன் போதைபொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என, மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]