போதைபொருளுடன் இந்தியர்கள் கைது

இந்தியர்கள் கைது

ஹெரோய்ன் போதை பொருளுடன் இந்தியப் பிரஜைகள் இருவர் தலைமன்னார் கடற் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆதம்கே பாலத்துக்கு அருகில் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கடற்படையினர் பரிசோதித்த போது இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெரோய்ன் என்று சந்தேகிக்கப்படுகின்ற 423 கிராமும் 900 மில்லிகிராம் அளவுடைய போதைப் பொருளும் 157 பீடி பக்கட்டுக்களும் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]