முகப்பு News Local News போதைபொருளுக்கு எதிராக போராட்டம்

போதைபொருளுக்கு எதிராக போராட்டம்

போதைப் பொருட் பாவனையை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டமொன்று இன்று காலை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

போதையை ஒழிப்போம் செயற்திட்டத்திற்கமைய வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் ஏற்பாட்டில் அச்சுவேலி பேருந்து நிலையத்தில் போராட்டம் இடம்பெற்றது.

இதன் போது பேருந்து நிலையத்தில் போதைப்பொருளுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com