போதைபொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு சென்றவர்கள் கைது

சிவனொளிபாதமலைக்கு போதை பொருட்களை கொண்டு சென்ற 24 இளைஞர்கள், கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கேரள கஞ்சா வைத்திருந்த 22 பேர், சட்டவிரோத சிகரட்டுக்கள் வைத்திருந்த இருவர் உள்ளிட்ட 24 சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, தியகல பகுதியில் காலை 11.00 மணிமுதல் இரவு எட்டு மணிவரை மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]