போக்குவரத்து பொலிஸார் மீது துப்பாக்கிச் சூட்டால் போர்க்களமானது கச்சார்வெளி : தேடுதல் வேட்டையில் படையினர்

கிளிநொச்சி பளை, கச்சார்வெளியில் நேற்றைய தினம் இரவு போக்குவரத்து பொலிஸாரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

முகமாலை பகுதியை அண்மித்த கச்சார்வெளி பிரதேசத்தில் நேற்றையதினம் இரவு 12.30 அளவில் ஏ9 வீதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸாரை இலக்கு வைத்து அடையாளந் தெரியாத சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து அங்கு பெருமளவா பாதுகாப்பு படையிலான களத்தில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியும் சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

போக்குவரத்து

துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. பிரதேச மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மோப்ப நாய்களும் தேடுதல் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]