போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரயில் வீதிகளை நிர்மாணிக்கும் முயற்சியில் அரசாங்கம்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரயில் வீதிகளை நிர்மாணிக்கும் முயற்சியில் அரசாங்கம்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில், இலகு ரயில் வீதிகளை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்மூலம் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதே முதற்கட்ட நோக்கம் என்றும், இதனுடாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியுமென மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 33 கிலோமீற்றருக்கு ராகமையில் இருந்து கிருலப்பனை வரையும், 28.3 கிலோமீற்றருக்கு களனியில் இருந்து மொரட்டுவை வரையும் மற்றும் 22.3 கிலோமீற்றருக்கு ஹுணுப்பிட்டியவில் இருந்து கொட்டாவ வரையும் இந்த இலகு ரயில் வீதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.

அதன் பிரகாரம், மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]