போக்குவரத்து குறித்து முக்கிய அறிவித்தல்

கொழும்பு – கண்டி பிரதான வீதி ஊடான போக்குவரத்து நாளை முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய களனி பாலத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த போக்குவரத்து மட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

நாளை முதல் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை இந்த போக்குவரத்து மட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு மற்றும் பகல் வேளைகளில் அவ்வப்போது இந்த போக்குவரத்து மட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]