போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தும் கூட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை

மே முதலாம் திகதி தொழிலாளர் தின கொண்டாட்டங்களில் ஈடுபடுவது சட்டரீதியாக தடைசெய்யப்படாத நிலையில், அன்று நடைபெறும் கூட்டங்களுக்கு பொலிஸாரால் எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், மே மாதம் முதலாம் திகதி வெசாக் தின நிகழ்வுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், வீதிகளில் போக்குவரத்து தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]