பொள்ளாச்சி விவகாரம்! கோபமாக பேசி வீடியோ வெளியிட்ட அறந்தாங்கி நிஷா – ஆபாசமாக பேசுவதை குறையுங்கள் என்று கமன்ட் செய்த நபர்!

அண்மையில் தமிழகத்தையே உலுக்கிய விடயம் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தான். இது குறித்து பலரும் பல விதத்தில் எதிர்ப்புக்களை வெளியப்படுத்தினர். திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் ஆவேசமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் காமெடி நடிகையாக அவதாரம் எடுத்திருக்கும், அறந்தாங்கி நிஷா, இந்த சம்பவம் தொடர்பாக ஆவேசமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் அம்மாவை வெளுத்து வாங்கினார். இந்த சட்டம் கடுமையாக இல்லாததன் காரணமாகவே பெண்கள் வெளியில் சொல்வதற்கு பயப்படுகின்றனர்.

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நிர்மலா தேவிக்கு இப்போ ஜாமீன் கொடுத்திருக்கிறார்கள், அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு யார் பொறுப்பு, அந்த சம்பவம் குறித்து நாம் கொந்தளித்த போது, முதலில் நிர்மலாவை உள்ளே தூக்கி போட்டார்கள்.

இப்போது அதை மறந்தவுடன் நிர்மலாவுக்கு ஜாமீன் கொடுத்துவிட்டனர். கடுமையான தண்டனைகள் இருந்தால் மட்டுமே, இதற்கு முடிவு காண முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் நான் வீடியோ போட்டதுக்கே என்னுடைய கமெண்டில் ஒருத்தர், நீங்க முதல்ல விஜய் டிவியில் ஆபாசமாக பேசுவதை குறையுங்கள் என்று கூறுகிறார்.

நான் வெளியில் ஒரு விஷயம் சொன்னாகூட நம்ம பண்ற தொழிலுக்குள்ள போய் நம்மை அசிங்கப்படுத்துகிறார்கள்.

அப்போ ஆண்களுடைய மனநிலை எப்படியிருக்கு பாருங்கள், நாம பேசுற விஷயம் என்னன்னு பார்க்காமல் நம்மகிட்ட என்ன குறை சொல்லலாம்னு தேடுறாங்க. பெண்கள் சாதிக்கக் கூடாது, பெண்கள் வாழவே கூடாது என்று நினைக்கிறீங்களா என கேள்வி கேட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]