பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய திருப்பம்- திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கோரிய தாயார்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு அவரது தாய் கோரிய ஜாமீன் மனுவை விசாரித்த பொள்ளாச்சி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

200 பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய 20 பேர் கொண்ட கும்பலை சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும்படி அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் திருநாவுக்கரசு.

இவர்தான் இவரது நண்பர்களின் காதல் வலையில் விழும் அப்பாவி பெண்களை மனமுறுக பேசி தனிமையான இடத்துக்கு வரவழைப்பார் என கூறப்படுகிறது.

அப்பெண்களை வீடியோ எடுப்பது, பலாத்காரத்துக்கு ஒத்துழைக்காவிட்டால் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இவரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது தாய் செல்வி பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திருநாவுக்கரசுதான் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது.

அவரிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டுவிட்டது. அவரிடம் இருந்த இரு ஹைபோன்கள் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுகுறித்த அறிக்கை வர வேண்டும். எனவே திருநாவுக்கரசுக்கு ஜாமீன் தர இயலாது என்று கூறிய நீதிபதிகள் செல்வியின் ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]