முகப்பு News Local News பொல்கஹவெல பகுதியில் இரண்டு தொடரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 25பேர் வைத்தியசாலையில் அனுமதி

பொல்கஹவெல பகுதியில் இரண்டு தொடரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 25பேர் வைத்தியசாலையில் அனுமதி

பொல்கஹவெல தொடரூந்து நிலையத்தின் பனலிய பிரதேசத்திற்கு அருகில் இரண்டு தொடரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

இந்த விபத்தில் காயமடைந்த 25 பேர் தற்போதைய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடரூந்தொன்று இயந்திர கோளாறு காரணமாக பொல்கஹவெல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.

பிற்பகல் 4.50 மணியளவில் கொழும்பில் இருந்து ரம்புக்கணை நோக்கி பயணித்த மற்றுமொரு தொடரூந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடரூந்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தொடரூந்து பாதுகாப்பு அதிகாரி அனுர ப்ரேமரத்ன தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com