பொலீசாரையும் நீதித்துறையும் இழிவாக பேசிய எச் ராஜா விளக்கமளிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

பொலீசாரையும் நீதித்துறையும் இழிவாக பேசிய எச் ராஜா விளக்கமளிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

புதுக்கோட்டையருகே நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எச் ராஜா நீதித்துறை மற்றும் பொலீசாரை இழிவாக பேசிய காணொளி ஒன்று இணையத்தளத்தில் பரவி வருகிறது. அக்கூட்டத்தில் பங்குபற்றிய எச் ராஜா பொலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச் ராஜா உயர்நீதிமன்றத்தையும் பொலீசாரையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார்.

திருமயம் காவல்துறையினர் எச் ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து சென்னை உயர்நிதிமன்ற நீதிபதிகள் சிடி செல்வம், நிர்மல் குமார் அமர்வு எச் ராஜாவினை 4 வாரத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

4 வாரத்துக்குள்ளே ஏதாவது ஒரு நாளில் கட்டாயமாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]