பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு புதிய பணிப்பாளர்.

பொலிஸ் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணை பிரிவின் பணிப்பாளராக செயற்பட்டுவந்த சீ.எ.பிரேமஷாந்த பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கபட்டு மொனராகலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவிவகித்த பவித்ர தயாரத்ன நிதிமோசடி விசாரணை பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சீ.எ.பிரேமஷாந்த பிரதி பொலிஸ்மா அதிபராக தனது பதவியை கடந்த மாதம் 29ம் திகதிமொனராகலையில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டமை சுட்டிக்காட்டதக்கது.