பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

கதிர்காமம் நகரில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கதிர்காமம் நகரில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலியாகியுள்ளார். அதனையடுத்து பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கதிர்காமம் நீதவான் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 30 திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து நகர் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சிலர்பொலிஸார் மீது கற்களை கொண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, கதிர்காமம் பொலிஸ்நிலையத்தின் மீது மக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதனால் பொலிஸ் நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.