பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு

சில நாட்களுக்கு முன்னதாக காணாமல் போயிருந்த வீரகொட்டிய பொலிஸில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரியொருவரின் சடலம் வனப்பகுதியில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.

ஹெட்டியாராச்சி பிரேமதாச எனும் 53 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற குறித்த நபரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]