பொலிஸார் இருவர் சடலங்களாக வவுணதீவில் மீட்பு

மட்டக்களப்பு- வவுணதீவில் பொலிஸார் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

வவுணதீவு வீதித்தடையில் நேற்றிரவு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ், பிரசன்னா ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

பொலிஸார் பொலிஸார்

இந்தச் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த, சிறப்புப் பொலிஸ் குழு ஒன்றை பொலிஸ் மா அதிபர் அமைத்துள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]