பொலிஸாரை தாக்கிய 44 பேர கைது

அநுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியில் தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் இடம்பெற்ற கலவர நிலையை அடுத்து, 44 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 39 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழப்ப நிலையின்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டதில் 4 பொலிஸார் காயடைந்துள்ளனர்.

காயமடைந்த பொலிஸார் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.