பொலிஸாரை தாக்கிய பிரதேச சபைத் தவிசாளர் கைது

தமன்கடுவ பிரதேச சபைத் தவிசாளர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காகவே தவிசாளர் பிரேமசிறி முனசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கதுருவெல பகுதியில் உள்ள சந்தியில் பாதசாரி கடவையில் கெப் வாகனத்தை நிறுத்திய போது அதனை அகற்றுமாறு குறித்த கெப் வாகன சாரதியை போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், வாகனத்திற்குள் இருந்த பிரதேச சபை தவிசாளர் “நான் யார் என்று உனக்கு தெரியுமா ” எனக் கூறி தகாத வார்த்தைகளை பிரயோகித்து பொலிஸாரை ஏசியுள்ளதுடன், துப்பாக்கிகளை கைப்பற்றி தாக்கியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]