பொலிஸாருக்கும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கும் தொடர்பு: விசாரணை தேவை என்கிறார் மஹிந்த அமரவீர

பொலிஸாருக்கும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கும் தொடர்பு: விசாரணை தேவை என்கிறார் மஹிந்த அமரவீர

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பாதாள உலகக்குழு உறுப்பினர்களுடன் தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணை சுயாதீனமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார வெளியிட்ட தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ‘அது மிகவும் பாரதூரமான தொலைபேசி உரையாடல். இது உண்மையாக இருந்தால் கட்டாயம் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும்.

அந்த தொலைபேசி உரையாடலில் மதூஷ் தொடர்பில் பேசப்படுகின்றது, பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர்களுடன் தொடர்பு இருந்தால் அதுதொடர்பில் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]