பொலிவூட் சினிமாவை தவிர்த்த காதல் ஜோடிகள்

பொலிவூட் சினிமாவை தவிர்த்த காதல் ஜோடிகள்.

பிரபாஸ், அனுஷ்கா காதல் வருடக்கணக்கில் கிசுகிசுக்கப்பட்டாலும் இருவரும் அதுபற்றி உறுதி செய்யவில்லை.

அனுஷ்கா பிரபாஸ்

இருப்பினும் இவர்களின் கிசுகிசு ஓய்ந்தபாடில்லை.

அண்மையில் இருவருக்கும் பிறந்த தினம் வந்தது. அப்போது ஒருவருக்கொருவர் விலை உயர்ந்த வாட்ச், சொகுசு கார் பரிசளித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஹிந்தியில் நடிக்க வந்த வாய்ப்பை பிரபாஸ் கூறிய அறிவுரையை ஏற்று அனுஷ்கா மறுத்ததாக தெரிய வந்ததுள்ளது.

prabhas-anushka

ஹிந்தியில் கிங் கானான ஷாருக்கான் நடித்த படம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் கரண் ஜோஹர்.

இவர் அனுஷ்காவை ஹிந்தியில் தனது படம் மூலம் அறிமுகம் செய்ய எண்ணினார்.

இதற்கமைய முதலில் அதை ஏற்றுக்கொண்ட அனுஷ்கா திடீரென்று தனது கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று தற்போது நடிக்க மறுத்துவிட்டாராம்.

Prabhas and Anushka Shetty

அனுஷ்காவின் திடீர் விலகலுக்கு காரணம் பிரபாஸ்தான் என்று கூறப்படுகிறது.

பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸுக்கு ஹிந்தியில் மார்க்கெட் உருவானது.

இதையடுத்து அவரை ஹிந்தியில் அறிமுகம் செய்ய எண்ணிய கரண் ஜோஹர் அதுபற்றி பிரபாஸிடம் தெரிவித்தார்.

பிரபாஸ்

சம்பளமாக ரூ. 20 கோடி தர வேண்டும் என்று பிரபாஸ் கேட்டதையடுத்து அந்த எண்ணத்தை கரண்ஜோஹர் கைவிட்டார்.

“பாகுபலி” திரைப்படத்தை ஹிந்தியில் ரிலீஸ் செய்து லாபம் பார்த்த கரண் ஜோஹர் அப்படத்தில் நடித்த ஜோடிகள் பிரபாஸ், அனுஷ்காவை ஹிந்தியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த முயற்சி இதுவரை கை கூடவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]