தேர்தல் பிரசாரத்தில் பொலித்தீன் பயன்படுத்த தடை

பொலித்தீன்

தேர்தல் பிரசார அலங்காரங்களுக்கு பொலித்தீன் பயன்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்குப் பணித்துள்ளார்.

இந்த தடையை மீறுவோருக்கு எதிராக, சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் அவர் கூறியுள்ளார்.

எல்லா பங்காளர்களுக்கும் ஒரு கூட்டத்தை நடத்தி ஒழுங்குமுறைகளை அவர்களுக்குத் தெரியப்படுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.