பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கதிர்காமம் நகர்

கதிர்காமம்

பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கதிர்காமம் நகர்

நேற்று முந்தினம் இரவு, உந்திருளியில் பயணித்த ஒருவர் காவற்துறையினரின் பணிப்பை மீறி பயணித்துள்ளார்.

இதனையடுத்து, காவற்துறை அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது குறித்த நபர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில், குறித்த காவற்துறை அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் தொடர்ந்தும் காவற்துறை விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, நேற்றைய குழப்பத்தின் போது கைது செய்யப்பட்ட 58 பேரும் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் திஸ்ஸமஹாராம நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]