பொலனறுவை குளத்தில் நீராடச் சென்ற தந்தையும், மகளும் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பொலனறுவை குளத்தில் நீராடச் சென்ற தந்தையும், மகளும் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பொலனறுவையில், குளத்தில் நீராடச் சென்ற தந்தையும், மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

பொலனறுவை மாவட்டம் – கிரிதலே குளத்தில் நீராடச் சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இதில் 45 வயதுடைய தந்தையும், 13 வயதுடைய மகளுமே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பிலிருந்து பொலன்னறுவைக்கு சுற்றுலா வந்திருந்திருந்த இவர்கள் குளத்தில் நீராடச் சென்ற வேளையிலேயே குறித்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.

மேலும் இரு மணிநேரங்களுக்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், சடலங்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது,

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]