பொறுப்பதிகாரியை இடமாற்ற கோரி தொண்டமான் போராட்டம்

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒன்றுக்கூடி, மஸ்கெலியா – அப்கட் பிரதான வீதியில், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதியை மறித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒரு கட்சி சார்பாக தனது சேவையை முன்னெடுப்பதால் அவருக்கு எதிராக இடமாற்ற நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட இ.தொ.கா முக்கியஸ்தர்கள் ஆர்ப்பாட்டகாரர்களுடன் இணைந்து வீதியில் அமர்ந்து போராடினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]